Monday, October 31, 2011

என் செய்வேன் செல்லமே



சரியா கொடுத்தா ஒரு முத்தம் மட்டும் போதும்னு சொல்லுற, ஆனா எப்படி கொடுத்தாலும் சரியா இல்லைனுதான் சொல்லுற,எப்படிதான் சரியா கொடுக்கறதுனு சொல்லி கொடு என்றாலும் மாட்டேங்குற என்றாய் நீ,சரியா கொடுப்பது எப்படினு சொல்லி கொடுத்தால் ஒரு முத்தம் மட்டும்தானே தருவ என்றேன் நான்

Tuesday, October 11, 2011

முத்த பரிசு



இன்று தேவதை உனக்கு 25வது பிறந்தநாள். நீ அசந்து போகும் அளவிற்கு பரிசு கொடுத்து உன்னை அசத்த வேண்டும் என்று முடிவு செய்து பரிசுகளை வாங்கி கொண்டு உன்னை பார்க்க வந்தேன்.உன்னை கண்டு வாழ்த்து தெரிவித்து விட்டு பரிசுகளை கொடுத்தேன்.எதுக்கு மாம்ஸ் இவ்வளவு பரிசுகள் என்றாய்,உனக்கு எத்தனையாவது பிறந்தநாளோ அத்தனை பரிசுகள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் அதான் என்றேன் நான்.சரிதான் ஆனா 24தானே இருக்கு என்றாய் நீ.25வது பரிசை நீ கேட்டதும் கொடுக்க வேண்டும் என்றுதான் இருந்தேன் என்று கூறி உன்னை அருகில் இழுத்து அணைத்து முத்தம் தந்தேன்.கிறங்கிபோய் இருந்த உன்னிடம் என்னடா பரிசுகள் எல்லாம் பிடித்து இருக்கிறதா என்றேன்,எல்லா பரிசும் பிடித்து இருக்கிறது,25வது பரிசு ரொம்ப பிடித்து இருக்கிறது என்றாய் நீ.

Friday, November 13, 2009

ஒரு மழைக்காலத்தின் மாலைப்பொழுது மழையில் நனைந்துகொண்டே வந்த என்னை திட்டினாய்.இப்படி நனைஞ்சுட்டு வர்றியே காய்ச்சல் வந்தா என்ன பண்ணுறது என்று திட்டிக்கொண்டே தலையை துவட்டி விட்டாய்.ஆனாலும் நீ பயந்தது போலவே காய்ச்சலும் வந்தது.இரவெல்லாம் என்னருகில் நீ இருந்து என்னை கவனித்துகொண்டாய்.ஒரு தாயின் அன்பை மனைவி உன்னிடம் நான் கண்ட நேரம் அது.மறுநாள் காலை விழிக்கும்பொழுது புன்னகைபூவாய் உன் முகம் என் எதிரில் காய்ச்சல் விட்டுவிட்டடதா என்றாய்.உன் மடி தந்த சுகமும்,உன் கைகள் என்னை சுற்றியே இருந்ததும் நினைவிற்க்கு வந்தது.நேற்று நீ இருந்த மாதிரி தினமும் இருந்தால் எனக்கு தினமும் காய்ச்சல் வந்தாலும் கவலை பட மாட்டேன் என்றேன்.ஒரு கணம் திகைத்த நீ எப்போதும் செல்லமாய் திட்டுவாயே பொறுக்கி என்று அதை கூறினாய்.கல்யாணத்திற்கு பிறகு நீ அந்த வார்த்தையை கூற மாட்டேன் என்றாய்.பந்தயமும் கட்டினாய்.சொல்லிவிட்டால் நான் கேட்டது முத்தம்.நீயும் கூறி விட்டாய்.முத்தம் தா என்றேன்.இன்னொரு தடவை இப்படி பண்ணாத உனக்கு உடம்பு சரி இல்லேன்னா என் உயிர் என்னிடம் இல்லை என்று கூறியபடியே முத்தம் தந்தாய்.அதே கணம் உன் கண்களில் இருந்து கண்ணீர் என் கைகளில் விழுந்தது.உன் முத்தத்தை விட நீ சிந்திய கண்ணீரில் தெரிந்தது உன் காதல்.வார்த்தைகளற்ற உலகில் நான்.ஒரு ஓவியமாய் என் மடியில் நீ.இந்த கணம் இப்படியே நின்று விடாதா?.......

Monday, October 26, 2009

Friday, October 9, 2009

இங்கு உள்ள அனைத்தும் கனவுகளும்,கற்பனைகளுமே.ஒவ்வொரு மனிதனுக்கும் காதல் பற்றியும் காதலி பற்றியும் பல கனவுகள் இருக்கும்.அந்த கனவுகளின் தொகுப்பே இந்த பக்கங்கள்.காதலை காதலிப்பவர்களுக்கும்,நேசிப்பவர்களுக்கும் இந்த நினைவுகள் சமர்ப்பணம்.